TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18 

April 19 , 2020 1684 days 452 0
  • இது நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இத்தினத்தை அனுசரிப்பதன் நோக்கம் சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் ஆணையத்தினால் (ICOMOS - International Council on Monuments and Sites) மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மூலம் கலாச்சாரப் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதாகும்.
  •  ஏப்ரல் 18 ஆம் தேதியானது நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேசத் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்று ICOMOS பரிந்துரைத்தது.
  • இதற்கு 1983 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பொதுச் சபையினால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. 
  • 2020 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “பகிரப்பட்ட கலாச்சாரம்; பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் பகிரப்பட்டப் பொறுப்புடைமை” என்பதாகும்.
  • மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் 2020 ஆண்டின் உலகக் கலாச்சாரத் தினத்தை மாமல்லபுரம் மற்றும் டெல்லி ஹுமாயுன் கல்லறை ஆகியவற்றின் மீதான ஒரு இணைய தளக் கருத்தரங்குடன் அனுசரித்தது
  • யுனெஸ்கோ அமைப்பானது உலகப் பாரம்பரியத் தளத்தை சிறப்புப் பாதுகாப்பு தேவைப்படுகின்ற இடம் மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பு அல்லது இயற்கையாக (அ) மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி என்று வரையறுக்கப் படுகின்றது. 
  • இந்தியாவில் மொத்தம் 38 உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன.
  • இதில் 30 கலாச்சாரத் தளங்கள், 7 இயற்கைத் தளங்கள் மற்றும் 1 கலப்புத் தளம் ஆகியவை உள்ளடங்கும்.
  • உலகில் அதிக எண்ணிக்கையிலான பாரம்பரியத் தளங்களைக் கொண்ட 6வது நாடு இந்தியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்